ஆண்டுதோறும் மார்ச் 8ம் நாளன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இங்கு வந்து ஏமாற்றபட்ட பெண்கள் மற்றும் இளைஞர்களை அவர்களின் சொந்த ஊர் செல்ல இந்திய எம்பஸிடம் பேசி அவர்களை ஊர் செல்ல உதவியும் செய்து வருகிறார். HIV பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மற்றும், கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டசத்து, மருந்துவகைகள், தவிர அவர்கள் படிப்பதற்கு உதவியும் செய்து வருகிறார். அப்படி குரலற்றவர்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் சில பெண்கள் குறித்து இந்த மகளிர் தினத்தில் பார்த்து வருகிறோம். எத்தனை எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகே இந்த பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமூக செயல்பாடுகளில் ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் எத்தனையோ பெண்கள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் பெண்களுக்கான பிரச்னைகளையும் தாண்டி சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கின்ற பெண்கள் அநேகம் இருக்கத்தான் செய்கிறார்கள்.